சில ஜனாதிபதி வேட்பாளர்களை தூதரகங்களே தீர்மானிக்கின்றன: அனுரகுமார திசாநாயக்க

by Bella Dalima 11-10-2019 | 8:42 PM
Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மகா சங்க மாநாடு கண்டியில் இன்று நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவிற்கு மகா சங்கத்தினரின் ஆசியைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் உரையாற்றிய அனுரகுமார திசாநாயக்க, பொருளாதாரத்தின் தன்னிறைவைக் கையகப்படுத்த வேண்டிய செயற்பாட்டை முதலில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். பொருட்களை இறக்குமதி செய்யவும் கடனை செலுத்தவும் 6 பில்லியன் டொலர்கள் போதுமானது அல்ல. பொருட்களை இறக்குமதி செய்யவோ கடனை செலுத்தவோ கட்டாயமாக 600 கோடி டொலர்களைக் கடனாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். எனினும், இன்று உண்ணுவதற்கே கடன் பெற வேண்டியுள்ளது என அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். மேலும், கடனைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், கடன் தரும் நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு அடிபணிய நேரிடுவதையும் அனுரகுமார தௌிவுபடுத்தினார். சில ஜனாதிபதி வேட்பாளர்களை தூதரகங்கள் தீர்மானிப்பதாகக் குறிப்பிட்ட அவர், கட்சியின் தலைமைகளையும் தூதரகங்களே தீர்மானிப்பதாகக் கூறினார்.