by Staff Writer 11-10-2019 | 3:46 PM
Colombo (News 1st) நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா IOC நிறுவனம் எரிபொருளின் விலையைக் குறைத்துள்ளது.
இதனடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் மற்றும் யூரோ 3 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எவ்வித திருத்தங்களும் இன்றி தொடர்ந்தும் பழைய விலையில் எரிபொருளை விநியோகிக்க எரிபொருள் விலை சூத்திரக்குழு தீர்மானித்துள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணெய்க்கான விலையில் தளம்பல் ஏற்படாமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கடந்த மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் ஒரு லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு ரூபாவாலும் ஒரு லிட்டர் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 2 ரூபாவாலும் குறைக்கப்பட்டது.
சுப்பர் டீசல் ஒரு லிட்டருக்கான விலை 2 ரூபாவால் கடந்த மாதம் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.