எத்தியோப்பிய பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

எத்தியோப்பிய பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

எத்தியோப்பிய பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

எழுத்தாளர் Bella Dalima

11 Oct, 2019 | 5:47 pm

Colombo (News 1st) எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமது அலி அமைதிக்கான நோபல் பரிசிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எத்தியோப்பியாவின் நான்காவது பிரதமராக கடந்த 2-4-2018 அன்று பொறுப்பேற்ற அபி அஹமது அலி அண்டை நாடான எரித்ரேயா அதிபருடன் மேற்கொண்ட சமரச நடவடிக்கைகளாலும் எத்தியோப்பிய நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தவும், ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கவும் ஆற்றிய அரும்பணிக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் தெரிவுக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்கு பெண் எழுத்தாளர் உட்பட இரண்டு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

2018 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு போலந்து நாட்டைச் சேர்ந்த ஒல்கா டோகார்சுக் (Olga Tokarczuk) என்ற பெண் எழுத்தாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுக்கு ஆஸ்திரியாவை சேர்ந்த எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்கி (Peter Handke) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஒல்கா டோகார்சுக் மற்றும் பீட்டர் ஹேண்ட்கி 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்