வௌிநாட்டு சந்தையில் கிராமிய மரவள்ளி அறிமுகம்

கிராமிய மரவள்ளியை வௌிநாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டம்

by Staff Writer 10-10-2019 | 1:32 PM
Colombo (News 1st) 40 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் பாரிய பசுமை முதலீட்டுத் திட்டமான கிராமிய மரவள்ளி உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தும் புதிய செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பொலனறுவை, வெலிகந்த பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வயல் நிலங்களை வளமாக்கும் 37,500 ஏக்கர் பரப்பில் மரவள்ளி பயிர்ச்செய்கை, நாடு முழுவதுமுள்ள 20,000 விவசாயிகளின் அறுவடைக்கான சந்தைவாய்ப்பு, நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய உற்பத்தி ஆலை ஆகியன இச் செயற்றிட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது. அந்நிய செலாவணியையும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இந்தச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.