பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமாரவிற்கு விளக்கமறியல்

பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமாரவிற்கு விளக்கமறியல்

பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமாரவிற்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

10 Oct, 2019 | 4:10 pm

Colombo (News 1st) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக கூட்டமொன்றை நடத்தி, துப்பாக்கியொன்றை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சாந்த சிசிர குமாரவை சிலாபம் மேல் நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு பிணையில் விடுவித்தது.

பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

பின்னர் 2013 ஆம் ஆண்டு பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதுடன், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டது.

பிணை நிபந்தனைகளுக்கு அமைய அவர் செயற்படவில்லை என பொலிஸாரிடம் சிலாபம் மேல் நீதிமன்றம் கோரிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கமைய, பிணை உத்தரவை இரத்து செய்த சிலாபம் மேல் நீதிமன்றம், சாந்த சிசிர குமாரவை கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்