நடுக்கடலில் நிர்க்கதிக்குள்ளான சம்மாந்துறை மீனவர்கள் மூவரில் ஒருவர் உயிரிழப்பு

நடுக்கடலில் நிர்க்கதிக்குள்ளான சம்மாந்துறை மீனவர்கள் மூவரில் ஒருவர் உயிரிழப்பு

நடுக்கடலில் நிர்க்கதிக்குள்ளான சம்மாந்துறை மீனவர்கள் மூவரில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Oct, 2019 | 5:04 pm

Colombo (News 1st) அம்பாறை – சம்மாந்துறையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமற்போயிருந்த மூன்று மீனவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏனைய இரண்டு மீனவர்களும் தெய்வேந்திரமுனை பகுதி மீனவர்களால் காப்பாற்றப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்களின் படகிலிருந்த இயந்திரம் பழுதடைந்தமையால் மீனவர்கள் நிர்க்கதிக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

நடுக்கடலில் சுகயீனமுற்ற மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

8 நாட்களாக உயிரிழந்த மீனவரின் சடலத்தை படகில் வைத்திருந்ததன் பின்னர், கடலில் சடலத்தை வீசியதாகக் காப்பாற்றப்பட்டுள்ள மீனவர்கள் கூறியுள்ளனர்.

இதன் பின்னர் தெய்வேந்திரமுனை மீனவர்களால் காப்பாற்றப்பட்ட இரண்டு மீனவர்களும் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்ட நிலையில், நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காப்பாற்றப்பட்ட மீனவர்கள் இருவரும் திருகோணமலை வைத்தியசாலையிலிருந்து அம்பாறை வைத்தியசாலைக்கு இன்று மாற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்