சஜித் பிரேமதாசவிற்கு பூரண ஆதரவு வழங்குவதாக சரத் பொன்சேகா தெரிவிப்பு

சஜித் பிரேமதாசவிற்கு பூரண ஆதரவு வழங்குவதாக சரத் பொன்சேகா தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

10 Oct, 2019 | 7:53 pm

Colombo (News 1st) ஐனாதிபதித் தேர்தலில் தனது பூரண ஆதரவை சஜித் பிரேமதாசவிற்கு வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்
ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா களனியவில் இன்று தெரிவித்தார்.

கட்சியிலுள்ள சிரேஷ்ட தலைவர்கள், பிரதமர் முதல் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் வரை 100 வீதம் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என சரத் பொன்சேகா மேலும் கூறினார்.

சஜித் பிரேமதாசவை தோற்கடிக்கச் செய்தால் கட்சி தோல்வியடையும். அவ்வாறு நேர்ந்தால், பொதுத்தேர்தல், மாகாண சபைத் தேர்தலில் அந்த தோல்வி பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் நிச்சயமாக அவரை நாம் வெற்றிபெறச் செய்வோம் என சரத் பொன்சேகா தெரிவித்தார்.

முன்னதாக தமக்கு சில மாற்றுக்கருத்துக்கள் காணப்பட்ட போதும், அவை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்