காலி முகத்திடலில் இன்று சஜித் தலைமையிலான பிரசாரக் கூட்டம் 

காலி முகத்திடலில் இன்று சஜித் தலைமையிலான பிரசாரக் கூட்டம் 

எழுத்தாளர் Staff Writer

10 Oct, 2019 | 6:58 am

Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று (10) பிற்பகல் கொழும்பு – காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்றைய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இன்று நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டத்தில் சுமார் 5 இலட்சம் ஆதரவாளர்கள் கலந்துகொள்வார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர், காலி முகத்திடலின் எந்தப் பகுதியிலிருந்தும் கூட்டத்தைக் கண்டுகளிப்பதற்கான நவீன வசதிகள் செய்யப்பப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்