எண்ணெய் விலைச்சூத்திர குழுக் கூட்டம் இன்று

எண்ணெய் விலைச்சூத்திர குழுக் கூட்டம் இன்று

எண்ணெய் விலைச்சூத்திர குழுக் கூட்டம் இன்று

எழுத்தாளர் Staff Writer

10 Oct, 2019 | 1:54 pm

Colombo (News 1st) எண்ணெய் விலைச்சூத்திரக் குழு இன்று (10) மாலை 6 மணிக்கு கூடவுள்ளது.

சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், நாட்டில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படாது என நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி கூடிய எரிபொருள் விலைச்சூத்திரக் குழுவினால் ஒரு லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு ரூபாவாலும் ஒரு லீற்றர் ஒக்டேன் 95 ரக பெற்றோல் 2 ரூபாவாலும் குறைக்கப்பட்டது.

அத்துடன், சுப்பர் டீசல் ஒரு லீற்றருக்கான விலை 2 ரூபாவால் கடந்த மாதம் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்