வாதுவ உள்ளிட்ட பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

வாதுவ உள்ளிட்ட பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

by Staff Writer 09-10-2019 | 6:53 AM
Colombo (News 1st) வாதுவ உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று (09) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், வாதுவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, வடக்கு மற்றும் தெற்கு களுத்துறை, கட்டுக்குருந்த, நாகொட, பயாகல, பிலிமத்தலாவ, போம்புவல, மக்கோன, பேருவளை, களுவாமோதர, மொரகல்ல, அளுத்கம, தர்காநகர் மற்றும் பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக கெத்ஹேன நீர்சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.