மருத்துவத்துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு

மருத்துவத்துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு

மருத்துவத்துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

09 Oct, 2019 | 4:29 pm

Colombo (News 1st) நிகழாண்டில் மருத்துவத் துறையில் சாதனை புரிந்தவா்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உடலியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதன் மூலம் மருத்துவத்துறைக்கு அரிய பங்களிப்பை வழங்கியதற்காக, வில்லியம் ஜி. கேலின் (William G. Kaelin), கிரெக் எல். செமென்ஸா (Gregg L. Semenza) ஆகிய இரு அமெரிக்க விஞ்ஞானிகளும், பிரிட்டனைச் சோ்ந்த பீட்டா் ஜே. ராட்கிளிஃபும் (Peter J. Ratcliffe) மருத்துவத்துறைக்கான நோபல் பரிசிற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

ஒக்சிஜன் அளவுகளை உயிரணுக்கள் எவ்வாறு உணா்கின்றன, அந்த அளவு மாற்றங்கள் உயிரணுக்களில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து இவா்கள் மேற்கொண்ட ஆய்வு, இரத்த சோகை, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்ததாக நோபல் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.

  1. வில்லியம் ஜி. கேலின் (William G. Kaelin) (61), அமெரிக்கா, ஹார்ட்வா்ட் பல்கலைக்கழகம்
  2.  கிரெக் எல். செமென்ஸா (Gregg L. Semenza) (63), அமெரிக்கா, ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
  3.  பீட்டா் ஜே. ராட்கிளிஃப் (Peter J. Ratcliffe) (65), பிரிட்டன், ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம்

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்