பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவின் பிணை இரத்து; மீண்டும் விளக்கமறியல்

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவின் பிணை இரத்து; மீண்டும் விளக்கமறியல்

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவின் பிணை இரத்து; மீண்டும் விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2019 | 12:13 pm

Colmbo (News 1st) கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பிணை வழங்குவது, சட்டத்திற்கு முரணான விடயம் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பகல் தீர்மானித்தது.

அதற்கமைய, நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள பிணை உத்தரவை இரத்து செய்து கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி உத்தரவிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்