புத்த சாசனத்தின் முன்னேற்றத்திற்கான கடமைகளை சற்றும் தளறாது நிறைவேற்றுவேன்: சஜித் பிரேமதாச

புத்த சாசனத்தின் முன்னேற்றத்திற்கான கடமைகளை சற்றும் தளறாது நிறைவேற்றுவேன்: சஜித் பிரேமதாச

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2019 | 9:05 pm

Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று கல்கிசை ஶ்ரீ தர்மபாலாராமய விகாரைக்கு சென்றிருந்தார்.

இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரரை சந்தித்து இதன்போது அவர் ஆசிபெற்றார்.

கல்கிசை ஶ்ரீ தர்மபாலாராம விகாரைக்கு சென்ற சஜித் பிரேமதாச வழிபாடுகளில் ஈடுபட்டார்.

சஜித் பிரேமதாசவின் எதிர்கால தேர்தல் நடவடிக்கைகளுக்காக மகா சங்கத்தினர் ஆசி வழங்கினர்.

இதனையடுத்து கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாச, புத்த சாசனத்தின் முன்னேற்றத்திற்கான கடமைகளை சற்றும் தளறாது நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்