by Chandrasekaram Chandravadani 09-10-2019 | 8:48 AM
Colombo(News 1st) சிரியாவுடனான தமது எல்லைப்பகுதியில் இராணுவ நிலைகளை துருக்கி வலுப்படுத்தியுள்ளது.
குர்திஷ் படைகளை இலக்குவைத்து தொடர் தாக்குதல்களை முன்னெடுக்கத் தயார் என அறிவித்த துருக்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
வட கிழக்கு சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து பல இராணுவக் கவச வாகனங்கள் சிரிய எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், குர்திஷ் படையினர் சிறப்பானவர்கள் எனவும் அவர்கள் கைவிடப்படவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்திருந்தார்.
குர்திஷ் படையினருக்கான ஆதரவில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியமை தொடர்பில் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.