எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நிறைவு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நிறைவு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2019 | 6:57 pm

Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று (08) நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்தது.

இதன் பிரகாரம், இந்த தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளுக்கும் இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி சோமரத்ன விதான பத்திரன தெரிவித்தார்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், இந்த தேர்தலில் 53,384 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

17 தேர்தல் தொகுதிகளில், 47 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட 5 அரசியல் கட்சிகளில் இருந்து 155 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், அவர்களில் 28 பேர் எல்பிட்டிய பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.

வாக்கெண்ணும் பணிகள் வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவுள்ளதுடன், எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தின் ஊடாக இறுதி முடிவு வௌியிடப்படவுள்ளது.

பிரசார பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றும் செயற்பாடுகளில் பொலிஸார் இன்று காலை ஈடுபட்டனர்.

எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபைக்கு சென்று, அதன் செயற்பாடுகளை காலி உதவி தேர்தல்கள் ஆணையாளர் கே.யூ.சந்தரலால் இன்று கண்காணித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்