பகிஷ்கரிப்பினால் ரயில்வே திணைக்களத்திற்கு நட்டம்

ஊழியர்களின் பகிஷ்கரிப்பால் ரயில்வே திணைக்களத்திற்கு பாரிய நட்டம்

by Staff Writer 09-10-2019 | 9:47 AM
Colombo (News 1st) ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு 1920 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில்வே திணைக்களத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த 12 நாட்கள் இடம்பெற்ற பணிப்பகிஷ்கரிப்பினால் பொருட்கள் மற்றும் எரிபொருளைக் கொண்டுசெல்லும் நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டு ஊழியர்கள் சேவைக்கு சமூகமளித்த போதிலும், சில ரயில்கள் சேவையில் ஈடுபடவில்லை. சில ரயில்கள் தாமதமாகி பயணித்ததாகவும் பயணிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். அத்துடன், முற்பதிவு செய்யப்பட்ட ரயில் அனுமதிச்சீட்டுக்கான பணத்தை பயணிகளுக்கு மீள வழங்குவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், அனுமதிச்சீட்டினை ரயில் நிலையங்களில் சமர்ப்பிப்பதன் மூலம் அதற்கான பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.