மேலும் 2141 கோடி ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

by Staff Writer 08-10-2019 | 8:28 PM
Colombo (News 1st) மேலும் 2141 கோடி ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலுக்காக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு பாதுகாப்பு வாகனங்களுக்கான சொகுசு வரி உள்ளிட்ட பல செலவுகளுக்காக இந்த குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சொகுசு வரியை செலுத்துவதற்காக 10 கோடியே 10 இலட்சம் ரூபா கோரப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் சூழல்சார் குழுவை நியமிப்பதற்காக மேலும் 9 கோடியே 31 இலட்சம் ரூபாவிற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. கோல்டன் கீ வைப்பீட்டாளர்களுக்கு செலுத்துவதற்காக இதிலிருந்து 15 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 107 பயணிகள் போக்குவரத்து ரயில் பெட்டிகளைப் பெறுவதற்காக 12 கோடியே 48 இலட்சம் ரூபாவும், சுவசரிய நோயாளர் காவு வண்டிகளுக்கான 300 தரிப்பு நிலையங்களுக்காக 20 கோடி ரூபாவும், கரையோர ரயில் மார்க்க சமிக்ஞை கட்டமைப்பை நிறுவுவதற்காக 27 கோடியே 44 இலட்சம் ரூபாவும் இந்த குறைநிரப்புப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.