தேயிலை விலையில் வீழ்ச்சி

தேயிலை விலையில் வீழ்ச்சி

by Staff Writer 08-10-2019 | 8:24 AM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் தேயிலை விலை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான 9 மாத காலப்பகுதியில் ஒரு கிலோகிராம் தேயிலையின் சராசரி விலை 541 ரூபா 88 சதமாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 40 ரூபா 7 சதம் குறைவாகும் என உற்பதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.