துருக்கிக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

துருக்கிக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

by Staff Writer 08-10-2019 | 9:32 AM
Colombo (News 1st) துருக்கியின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்வதாக அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரிய விவகாரத்தில் துருக்கி எல்லை மீறி செயற்படுவதாக சுட்டிக்காட்டி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் இதனை பதிவிட்டுள்ளார். சிரியாவில் நிலைகொண்டுள்ள சுமார் 1000 அமெரிக்கப் படையினர்களில் சிலர் எல்லைப் பகுதியிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிரியாவின் கிழக்குப் பகுதியில் தாக்குதலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் நேற்று அறிவித்திருந்தார். அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்ட குர்திஷ் படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு துருக்கி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படையினரை வௌியேற்றும் தமது தீர்மானத்தை துருக்கி தமக்கு சாதகமாக்குவதற்கு முயற்சிக்கக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அவ்வாறான அத்துமீறல்கள் இடம்பெறும் பட்சத்தில் தாம் துருக்கி மீது ஏற்கனவே முன்னெடுத்ததை போன்று கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த ஆண்டு துருக்கியின் பொருட்களுக்கு அமெரிக்காவினால் அதிக வரி விதிக்கப்பட்டதுடன், சில அதிகாரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
colombo:

කොළඹ

English - Sinhala