புத்தளத்தில் மரமுந்திரிகை செய்கையாளர்கள் பாதிப்பு

உரிய விலை இன்மையால் மரமுந்திரிகை செய்கையாளர்கள் பாதிப்பு

by Staff Writer 08-10-2019 | 7:21 PM
Colombo (News 1st) தமது உற்பத்திக்கான கேள்வி மற்றும் விலை இல்லாமையால் புத்தளம் மாவட்டத்தின் மரமுந்திரிகை செய்கையாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்திவில்லு பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மரமுந்திரிகை உற்பத்தி பிரதான உற்பத்தியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த மரமுந்திரிகை செய்கையில் பெருமளவில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் மரமுந்திரிகைக்கு உரிய விலை இன்மையால் தமது உற்பத்தியை சந்தைப்படுத்துவதில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குவதாக உற்பத்தியாளர்கள் கவலை வௌியிட்டனர். தமது தொழிலை மேம்படுத்த சமுர்த்தி வங்கிகள் மூலம் கடன்களைப் பெற்றுக்கொண்டுள்ள போதிலும், கடனை திருப்பிச் செலுத்துவதில் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். எனவே, உற்பத்தி செய்யப்படும் மரமுந்திரிகைக்கு அரசு நிர்ணய விலை அறிவித்து உள்ளூர் உற்பத்தி மற்றும் வௌியூர் ஏற்றுமதியை மேம்படுத்த கரிசனை செலுத்த வேண்டும் என செய்கையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.