ஹட்டனில் பாடசாலை பஸ் குடைசாய்ந்து விபத்து: 32 பேர் காயம்

ஹட்டனில் பாடசாலை பஸ் குடைசாய்ந்து விபத்து: 32 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2019 | 5:06 pm

Colombo (News 1st) ஹட்டன் – பொகவந்தலாவை, வனராஜா சந்தியில் பாடசாலை பஸ்ஸொன்று குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹட்டன் – குடாகமவிலிருந்து பொகவந்தலாவை நோக்கிப் பயணித்த பாடசாலை பஸ் சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்களில் 29 மாணவர்களும் 3 மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் ஹட்டன் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வனராஜா பிரதேசத்தில் நிலவும் சீரற்ற வானிலையினால் குறித்த பகுதியில் பயணிக்கும் வாகன சாரதிகளை அவதானமாகச் செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்