மூவருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு

மூவருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு

மூவருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு

எழுத்தாளர் Bella Dalima

08 Oct, 2019 | 4:53 pm

Colombo (News 1st) சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்கள் குறித்து (அண்டவியல்) ஆய்வு மேற்கொண்ட 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

இந்நிலையில், 2019-ஆம் ஆண்டிற்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.

விஞ்ஞானிகள் ஜேம்ஸ் பீப்ள்ஸ் (James Peebles), மைக்கேல் மேயர் (Michel Mayor), திதியர் க்யூலோஸ் (Didier Queloz) ஆகியோர் இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்