பாராளுமன்ற பூந்தோட்டத்தில் மண்மேடு சரிவு

by Staff Writer 08-10-2019 | 7:07 AM
Colombo (News 1st) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் காணப்படும் பூந்தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது சுமார் 20 அடி உயரமான மண்மேடு சரிந்து, தியவன்னா ஓயாவில் வீழ்ந்துள்ளதாக பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் பிரசன்னமாகும் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள பூந்தோட்டத்திலேயே இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாகப் பெய்யும் பலத்த மழை காரணமாக இந்தப் பகுதியில் மண்சரிவிற்கான அபாயம் நிலவியுள்ளது. தற்போது குறித்த பகுதிக்கு புவிசரிதவியல் திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

ஏனைய செய்திகள்