எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நிறைவு

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நிறைவு

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2019 | 1:07 pm

Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று (08) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.

எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதாரணபத்திரன குறிப்பிட்டுள்ளார்.

47 வாக்களிப்பு நிலையங்களின் ஊடாக எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

பிரதேச சபைத் தேர்தலின் நிமித்தம் எல்பிட்டிய மற்றும் பிட்டிகல பொலிஸ் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு கடந்த மாதம் 27 ஆம் திகதியும் இம்மாதம் 4ஆம் திகதியும் நடைபெற்றது.

தபால்மூலம் வாக்களிப்பிற்கு 1192 பேர் தகுதிபெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்