இரண்டு பத்திரிகைகள் மீது இளவரசர் ஹரி வழக்கு

இரண்டு பத்திரிகைகள் மீது இளவரசர் ஹரி வழக்கு

இரண்டு பத்திரிகைகள் மீது இளவரசர் ஹரி வழக்கு

எழுத்தாளர் Bella Dalima

08 Oct, 2019 | 4:37 pm

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாகக் கூறி The Sun மற்றும் Daily Mirror ஆகிய இரண்டு பத்திரிகைகள் மீது இளவரசர் ஹரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதேவேளை, இங்கிலாந்து இளவரசி மேகன் தனது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை அனுமதியில்லாமல் வெளியிட்டது தொடர்பாக The Mail on Sunday என்ற பத்திரிகையின் மீது அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இது குறித்து பேசிய இளவரசர் ஹரி, தனது தாயார் டயானாவை போல் மனைவி மேகன் ஊடகங்களால் குறிவைக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாகக் கூறி The Sun மற்றும் Daily Mirror ஆகிய இரண்டு பத்திரிகைகள் மீதும் இளவரசர் ஹரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

எனினும், இதற்கான ஆதாரங்களையோ, என்ன மாதிரியான உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டது என்பது குறித்த கூடுதல் தகவல்களையோ பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவிக்க மறுத்துவிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்