வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்துகளில் மூவர் உயிரிழப்பு

வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்துகளில் மூவர் உயிரிழப்பு

வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்துகளில் மூவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2019 | 9:07 am

Colombo (News 1st) ஹபரணை, புத்தளம் மற்றும் குடா ஓயா பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பாதசாரிகள் இருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை – தலபத்கந்த பகுதியில் மோட்டார்சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில், மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், மோட்டார்சைக்கிளில் பயணித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதேநேரம், புத்தளம் – குருநாகல் வீதியின் மூன்றாம் மைல்கல் பகுதியில் பயணித்த மோட்டார்சைக்கிள் ஒன்று பாதசாரி மீது மோதியுள்ளது.

சம்பவத்தில் 67 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவளை, குடா ஓயா – தனமல்வில பகுதியில் பயணித்த வாகனமொன்று மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அடையாளம் தெரியாத வாகனமொன்று விபத்தை ஏற்படுத்தி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்