பாகிஸ்தானைத் தோற்கடித்த இலங்கை அணி

பாகிஸ்தானைத் தோற்கடித்த இலங்கை அணி

பாகிஸ்தானைத் தோற்கடித்த இலங்கை அணி

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2019 | 7:24 am

Colombo (News 1st) பாகிஸ்தானுக்கு எதிரான முதல் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 64 ஓட்டங்களால் இலங்கை வெற்றியீட்டியுள்ளது.

லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி சார்பாக தனுஷ்க குணதிலக்க 8 பவுன்டரிகள் 1 சிக்சருடன் 38 பந்துகளில் 57 ஓட்டங்களைக் குவித்தார்.

அவிஷ்க பெர்னாண்டோ 33 ஓட்டங்களையும் அறிமுக வீரரான பானுக்க ராஜபக்‌ஷ 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

அணித்தலைவர் தசுன் சானக்கவினால் 17 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றது.

மொஹமட் ஹஸ்னைன் ஹெட்ரிக் பெறுதியுடன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் தடுமாற்றமான ஆரம்பத்துக்கு மத்தியில் 22 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்களையும் இழந்தது.

பாபர் அஸாம் 13 ஓட்டங்களுடன் வெளியேற, 16 மாதங்களின் பின்னர் அணிக்கு திரும்பிய அஹமட் ஷெஷாட் 4 ஓட்டங்களுடன் போல்டானார்.

பாகிஸ்தான் அணி 17.4 ஓவர்களில் 101 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

போட்டியில் 64 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் 1 – 0 என முன்னிலை பெற்றுள்ளது.

2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியொன்றில் இலங்கை அணி பாகிஸ்தானை வெற்றிகொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

பாகிஸ்தான் அதன் சொந்த மண்ணில் தோல்வியடைந்த இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்