பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை தொடர்பில் அதிக கவனம்

பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை தொடர்பில் அதிக கவனம்

பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை தொடர்பில் அதிக கவனம்

எழுத்தாளர் Fazlullah Mubarak

06 Oct, 2019 | 6:16 pm

Colombo (News 1st) பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வௌியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

எனினும், பரவியுள்ள வதந்தி தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களுக்கு சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்