பணிப்பகிஷ்கரிப்பின் மத்தியில் நாளை முதல் 30 ரயில்கள் சேவையில்…

பணிப்பகிஷ்கரிப்பின் மத்தியில் நாளை முதல் 30 ரயில்கள் சேவையில்…

பணிப்பகிஷ்கரிப்பின் மத்தியில் நாளை முதல் 30 ரயில்கள் சேவையில்…

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2019 | 10:22 am

Colombo (News 1st) நாளை (07) முதல் 30 ரயில்களை சேவைகளை ஈடுபடுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அலுவலக ஊழியர்களுக்காக நாளாந்தம் 40 ரயில்கள் தேவைப்படுவதாக பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரயில் சேவையை வழமைக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு போக்குவரத்து அமைச்சினால் ரயில்வே பொது முகாமையாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான எழுத்துமூலமான ஆவணம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் L.G. ஜயம்பதி தெரிவித்துள்ளார்.

அத்தியவசிய சேவைக்கான விதிமுறைகளுக்கு அமைய, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், பணிக்கு சமூகமளிப்பதற்கு எதிர்பார்த்துள்ள ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கும் வரை, தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப் போவதில்லை என ரயில் சாரதிகள் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்