தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகின

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகின

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகின

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2019 | 12:04 pm

Colombo (News 1st) 2019 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (06) பகல் வெளியாகியுள்ளன.

www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து, பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மற்றும் ஶ்ரீ ஜயவர்தன கோட்டை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்கள், நாளை (07) காலை 9 மணியின் பின்னர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு வருகைதந்து பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பாடசாலைகளுக்கான பெறுபேறுகள் நாளை காலை தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 3 32 179 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இதேவேளை, இந்தத் தடவை நாடளாவிய மற்றும் மாவட்ட ரீதியில் பெறுபேறுகள் வௌியிடப்படவில்லை என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்