ஜனாதிபதித் தேர்தல் குறித்த சுதந்திரக் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்று

ஜனாதிபதித் தேர்தல் குறித்த சுதந்திரக் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்று

ஜனாதிபதித் தேர்தல் குறித்த சுதந்திரக் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்று

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2019 | 7:33 am

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்று (06) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இறுதித் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரத்தைக் கட்சியின் மத்திய செயற்குழுவின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியுள்ளதாக கட்சியின் ஊடகப்பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

இன்று முற்பகல் 11 மணிக்கு கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஊடக சந்திப்பில் ஜனாதிபதி இது தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் நேற்றிரவு நடைபெற்றுள்ளது.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பு சுமார் 2 மணித்தியாலங்கள் வரை நீடித்ததாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்