ஈராக்கிய போராட்டங்களை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்

ஈராக்கிய போராட்டங்களை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்

ஈராக்கிய போராட்டங்களை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

06 Oct, 2019 | 7:59 am

Colombo (News 1st) ஈராக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் நிலவும் வேலையின்மை, பொதுச்சேவைகளின் திருப்தியற்ற தன்மை மற்றும் ஊழலுக்கு எதிராக தாம் போராடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ள நிலையில் இவை நிறுத்தப்பட வேண்டும் என ஈராக்கிற்கான ஐக்கிய நாடுகளின் உதவி நிலையத்தின் தலைவர் Jeanine Hennis Plasschaert கூறியுள்ளார்.

இந்த உயிரிழப்புக்களுக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்