ஹொங்காங் போராட்டத்திற்கு ஐ.நா கண்டனம்

ஹொங்காங் போராட்டத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கண்டனம்

by Bella Dalima 05-10-2019 | 5:47 PM
ஹொங்காங்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹொங்காங்கில் கொண்டுவரப்பட்ட முகமூடி தடைச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹொங்காங்கில் மக்கள் ஒன்று கூடும் இடங்களில் முகமூடிகள் அணிவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அவசரகால ஒழுங்குகள் எனப்படும் குறித்த சட்டம் கடந்த 50 வருடங்களாக ஹொங்காங்கில் பயன்படுத்தப்பட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்சலெட் கண்டனம் வௌியிட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறைச் செயல்கள் தொடர்பில் உடனடியான சுயாதீனமான மற்றும் பக்கசார்பற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.