பாகிஸ்தானின் வெற்றி இலக்கு 166 ஓட்டங்களாக நிர்ணயம்

பாகிஸ்தானின் வெற்றி இலக்கு 166 ஓட்டங்களாக நிர்ணயம்

பாகிஸ்தானின் வெற்றி இலக்கு 166 ஓட்டங்களாக நிர்ணயம்

எழுத்தாளர் Staff Writer

05 Oct, 2019 | 9:20 pm

Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தானின் வெற்றி இலக்கு 166 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லாகூரில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

உமார் அக்மால் மற்றும் அஹமட் செஷாட் ஆகியோர் 16 மாதங்களின் பின்னர் பாகிஸ்தான் தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை இன்று பெற்றனர்.

இலங்கை அணிக்கு தனுஸ்க குணதிலக்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஜோடி ஆரம்பத்தை வழங்கியது.

இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்காக 84 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

தனுஷ்க குணதிலக்க 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 38 பந்துகளில் 57 ஓட்டங்களை விளாசினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்