கல்விசாரா ஊழியர் பிரச்சினை தொடர்பில் அறிக்கை

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது

by Staff Writer 05-10-2019 | 5:09 PM
Colombo (News 1st) பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான அறிக்கை ஒரு மாதத்திற்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தேசிய சம்பள மற்றும் பதவியணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கோரப்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.ரனுக்கே தெரிவித்தார். இதனிடையே, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய சம்பள மற்றும் பதவியணிகள் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் M.M.P.K.மாயாதுன்னே கூறினார். சம்பள முரண்பாடுகளை நீக்கக் கோரி பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று 26 ஆவது நாளாக தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.