பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தாலும் 12 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு தெரிவிப்பு

பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தாலும் 12 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு தெரிவிப்பு

பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தாலும் 12 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Oct, 2019 | 4:44 pm

Colombo (News 1st) ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தாலும் இன்றும் 12 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

கம்பஹா, பொல்கஹவெல, மஹவ உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து கொழும்பு கோட்டை வரை குறித்த ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பீ. ஜயம்பதி தெரிவித்தார்.

இதனிடையே, சம்பள பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று பத்தாவது நாளாகவும் தொடர்கின்றது.

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதனால் அனைவரும் உடனடியாக சேவைக்குத் திரும்ப வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், தமது சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு கிட்டும் வரையில் பகிஷ்கரிப்பை கைவிடப்போவதில்லை என ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்