உலகக் கிண்ண ரக்பி: முதல் அணியாக இங்கிலாந்து காலிறுதிக்கு தகுதி

உலகக் கிண்ண ரக்பி: முதல் அணியாக இங்கிலாந்து காலிறுதிக்கு தகுதி

உலகக் கிண்ண ரக்பி: முதல் அணியாக இங்கிலாந்து காலிறுதிக்கு தகுதி

எழுத்தாளர் Staff Writer

05 Oct, 2019 | 9:31 pm

Colombo (News 1st) உலகக் கிண்ண ரக்பி தொடரில் முதல் அணியாக இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதேவேளை, இன்று நடைபெற்ற ஏனைய போட்டிகளில் இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய அணிகள் வெற்றிபெற்றன.

உலகக் கிண்ண ரக்பி தொடர் ஜப்பானில் நடைபெறுவதுடன், D குழுவிற்கான ஒரு போட்டியில் அவுஸ்திரேலியாவும் உருகுவேயும் மோதின.

போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயற்பட்ட அவுஸ்திரேலிய அணி முதல் பகுதியில் 19 – 3 எனும் புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பகுதியில் அவுஸ்திரேலியா மேலும் 26 புள்ளிகளைக் கைப்பற்றியது.

உருகுவே அணியால் இரண்டாம் பகுதியில் மேலும் 7 புள்ளிகளையே பெற முடிந்தது.

போட்டியில் 45 -10 எனும் புள்ளிகள் கணக்கில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்