பிரான்ஸில் பொலிஸ் தலைமையகத்தில் 3 பொலிஸார் உள்ளிட்ட நால்வர் கத்தியால் குத்தி கொலை

பிரான்ஸில் பொலிஸ் தலைமையகத்தில் 3 பொலிஸார் உள்ளிட்ட நால்வர் கத்தியால் குத்தி கொலை

பிரான்ஸில் பொலிஸ் தலைமையகத்தில் 3 பொலிஸார் உள்ளிட்ட நால்வர் கத்தியால் குத்தி கொலை

எழுத்தாளர் Bella Dalima

04 Oct, 2019 | 4:17 pm

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் பணிபுரியும் ஒருவர் மூன்று பொலிஸார் உட்பட நால்வரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெயர் வெளியிடப்படாத தாக்குதல்தாரி நிகழ்விடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

தங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டி வரும் பிரான்ஸ் பொலிஸார், தங்களது கோரிக்கைளை வலியுறுத்தி நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தாக்குதல்தாரியின் நோக்கம் குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இல்லை. எனினும், பணியிடத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்