இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ கேஸ் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ கேஸ் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Oct, 2019 | 5:34 pm

Colombo (News 1st) இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ கேஸ் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது.

அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 240 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலையாக 1,493 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ கேஸ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை 95 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

2.3 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 289 ரூபா என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

புதிய விலைத் திருத்தத்திற்கு அமைய, ஏனைய மாவட்டங்களிலும் லிட்ரோ கேஸ் சமையல் எரிவாயுவிள் விலை குறைக்கப்படவுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 251 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விலை சூத்திரத்திற்கு அமைய, லிட்ரோ கேஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கிணங்க விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்