மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படுகின்றன

மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படுகின்றன

by Staff Writer 03-10-2019 | 9:23 AM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் மதுபான விற்பனை நிலையங்களை இன்று (03) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மது ஒழிப்பு தினைத்தை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானத்திற்கு அமைய, சட்டவிரோத மதுபான உற்பத்தி, விற்பனை ஆகியவற்றில் ஈடுபடுவோர் மற்றும் மதுவரி சட்டத்தை மீறுவோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான சுற்றிவளைப்பு நடவடிவடிக்கைகளுக்கான 1000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வௌிநாட்டு மதுபான சில்லறை விற்பனை, போக்குவரத்து மற்றும் கையிருப்பில் வைத்திருப்பதற்கான அளவை 80 லீற்றராக அதிகரிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை காலம், வௌிநாட்டு மதுபான சில்லறை விற்பனை, போக்குவரத்து மற்றும் கையிருப்பில் வைத்திருப்பதற்கான அளவு 7.5 லீற்றராகக் காணப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.