ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் குமார வெல்கம?

by Staff Writer 03-10-2019 | 8:17 AM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவைக் களமிறக்கவுள்ளதாக குறித்த அமைப்பின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி ரஜித கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். TV 1 தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் Maayima நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜித கொடிதுவக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.