by Staff Writer 03-10-2019 | 7:31 AM
Colombo (News 1st) ரயில் சாரதிகள், நிலையப் பொறுப்பதிகாரிகள், ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் கண்காணிப்பு முகாமையாளர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று (03) 8ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
தமது கோரிக்கைக்கு நியாயமான தீர்வொன்று வழங்கப்படும் வரை தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதேவேளை, சம்பள முரண்பாட்டை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று 24 ஆவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் நேற்று (02) மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தமது கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்து ஆவணமொன்று வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் ஊடக செயலாளர் சமன் காரியவசம் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆவணம் வழங்கப்படும் வரை தமது பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் எனவும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.