இந்தியன்-2 படத்தில் கமலுடன் இணையும் தர்ஷன்

இந்தியன்-2 படத்தில் கமலுடன் இணையும் தர்ஷன்

இந்தியன்-2 படத்தில் கமலுடன் இணையும் தர்ஷன்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

03 Oct, 2019 | 3:22 pm

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான Bigg Boss – 3 இலிருந்து கடந்த வாரம் வௌியேறியவர் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் தியாகராஜா.

ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசனின் நடிப்பில் வௌியாகிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகின்றது.

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தில் Bigg Boss புகழ் தர்ஷனும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வௌியாகியுள்ளன.

இந்தத் தகவல்கள் உறுதியாகும் பட்சத்தில், உலக நாயகன் கமல் ஹாசனுடன் தர்ஷனும் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் கமல் ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், விவேக், பிரியா பவானி சங்கர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஸ் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்தில் நடிப்பது தொடர்பில் தர்ஷனுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்