பலாலி விமான நிலையத்தின் பெயர் மாற்றம்

பலாலி விமான நிலையத்தின் பெயர் மாற்றம்

by Staff Writer 03-10-2019 | 4:46 PM
Colombo (News 1st) பலாலி விமான நிலையம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் புனரமைப்புப் பணிகளை எதிர்வரும் 10 ஆம் திகதி நிறைவு செய்யவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு தெரிவித்துள்ளது. விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாள் ஒன்றில் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களும் சர்வதேச விமான நிலையங்களாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.