கொழும்பிலுள்ள சில பாடசாலைகளுக்கு 7 ஆம் திகதி விசேட விடுமுறை

கொழும்பிலுள்ள சில பாடசாலைகளுக்கு 7 ஆம் திகதி விசேட விடுமுறை

கொழும்பிலுள்ள சில பாடசாலைகளுக்கு 7 ஆம் திகதி விசேட விடுமுறை

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2019 | 3:58 pm

Colombo (News 1st) கொழும்பிலுள்ள சில பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (07) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பொரளை, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு ஆகிய கல்வி வலையங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இராஜகிரிய ஜனாதிபதி, ஹேவாவிதாரண மற்றும் ஹேவாவிதாரண கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றிற்கும் திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.ஜி.விஜயபந்து குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதால் அன்றைய தினம் குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்