ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு இன்று

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2019 | 6:53 am

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு கொழும்பு – சுகததாச உள்ளக அரங்கில் இன்று (03) முற்பகல் நடைபெறவுள்ளது.

இதன்போது சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக நியமித்து யோசனை நிறைவேற்றப்படவுள்ளது.

இன்று நடைபெறவுள்ள மாநாடு குறித்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கருத்து தெரிவிக்கையில்,

கட்சியின் பிரதித்தலைவரை எமது வேட்பாளராக அறிவிக்கவும் ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக அறிவிக்கவும் ஐக்கிய தேசிய கட்சியின் மாநாடு இன்று நடைபெறவுள்ளது. கட்சியை சேர்ந்த நாட்டிலுள்ள அனைத்துத் தொகுதி அமைப்பாளர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி என அனைவரும் இன்று மாநாட்டில் ஒன்று கூடுகின்றனர். வேட்பாளரை பெயரிடும்போது, மாநாடொன்றை நடத்தி அதில் வேட்பாளரை அறிவிப்பதே ஐக்கிய தேசிய கட்சியின் நடைமுறையாகும் அதன்பிரகாரம் செயற்படுகின்றோம்

என தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்