எம் மதத்தையும் சார்ந்தவன் அல்லன் – அமிதாப் பச்சன்

எம் மதத்தையும் சார்ந்தவன் அல்லன் – அமிதாப் பச்சன்

எம் மதத்தையும் சார்ந்தவன் அல்லன் – அமிதாப் பச்சன்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

03 Oct, 2019 | 3:25 pm

தான் எம் மதத்தையும் சார்ந்தவன் அல்லன் என பொலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமது குடும்பப் பெயரான பச்சன் எம் மதத்தையும் சார்ந்தது அல்ல எனவும் தனது தந்தையும் அதற்கு எதிரானவர் எனவும் அவர் கூறியுள்ளார்.

மதம் தொடர்பில் தன்னிடம் யாராவது வினவினால், எம் மதத்தையும் சார்ந்தவன் அல்லன் எனவும் தான் ஒரு இந்தியன் எனக் கூறுவதாகவும் அமிதாப் பச்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்