ஈராக்கிய தலைநகரில் ஊரடங்கு சட்டம் அமுல்

ஈராக்கிய தலைநகரில் ஊரடங்கு சட்டம் அமுல்

ஈராக்கிய தலைநகரில் ஊரடங்கு சட்டம் அமுல்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

03 Oct, 2019 | 1:06 pm

Colombo (News 1st) ஈராக்கிய தலைநகர் பக்தாத்தில் (Baghdad) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அரச எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்தே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் ஏனைய 3 நகரங்களில் ஏற்கனவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 7 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் சமூக வலைத்தளங்கள், இணையவசதிகளும் முடக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்