மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினம் இன்று

மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினம் இன்று

by Staff Writer 02-10-2019 | 2:11 PM
Colombo (News 1st) மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினம் இன்று (02) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகிய இருவரின் பிறந்த நாளும் ஒக்டோபர் 2-ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர்களது நினைவிடங்களில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரின் பெருமையையும் எடுத்துரைக்கும் விதமாக வீடியோக்களை இந்திய பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
தேசத்தின் மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாளில் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நமது அன்பிற்குரிய பாபுவுக்கு மரியாதைக்குரிய வணக்கம்! மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மனிதகுலத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு நாம் அனைவரும் நன்றி தெரிவித்துக்கொள்வோம். அவரது கனவுகளை நனவாக்குவதற்கும் சிறந்த முயற்சியை உருவாக்குவதற்கும் தொடர்ந்து கடினமாக உழைக்க உறுதியேற்போம்.
என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.