.webp)
கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக முன்நிற்பதைத் தடுக்க ஐக்கிய தேசியக் கட்சி எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார். எவ்வாறாயினும், ஜனாதிபதி வேட்பாளராக முன்நிற்க கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தகைமை இல்லை என்றே தாம் கூறுவதாகவும் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். இன்று அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இதனைக் கூறினார்.